நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது குழந்தைகள் யாத்விக்(3), நிதின் ஆதித்யா(11 மாதம்), இன்று காலை இந்துமதி வீட்டில் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில்(சம்ப்) எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை பார்க்க மூடியை திறந்தவர் பின்னர் அதனை மூடவில்லை.
அப்போது குழந்தைகள் இருவரும் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். 1 மாத குழந்தை நிதின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துவிட்டான். அவனை காப்பாற்ற அண்ணன் யாத்விக்கும் தொட்டியில் குதித்தான். இதைப்பார்த்த தாய் இந்துமதியும் தண்ணீர் தொட்டியில் குதித்துள்ளார். அவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் மூவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். இது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.