அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி கலைஞர் அறிவாலத்தில் தொடங்கியது. கொடியை ஏந்திக் கொண்டு கோவை சாலை வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் உள்ள
முன்னாள் முதல்வர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி அஞ்சலி செலுத்தியதுடன், 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.