தமிழகம் முழுவதும் அண்ணாவின் 56 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் நகர திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக கேணிக்கரை பகுதியில் இருந்து திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா
முருகன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் நகரில் பேரணியாக வந்தனர். தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.