70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்துக்கு வரும் நாளை மறுநாள்( 5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. எனவே இன்று அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.
இன்றைய பிரசாரத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். அவர் டில்லியில் நூதன பிரசார முறையை கையாண்டார். டில்லியில் உள்ள ஒரு மரத்தடியில் சுமார் 20 மாணவ, மாணவிகளை உட்கார வைத்து அவர்களுடன் அரசியல் குறித்து உரையாடினார். அப்போது அவர் டில்லி ஆம் ஆத்மி அரசு குறித்து பல குறைகளை கூறி வாக்கு சேகானார்.