Skip to content

கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான நொய்யல் ஆறு கரையோர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷ விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைத்து சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தத்திற்கு மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை புனித தீர்த்தத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் தீபம் காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவில் சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்தடைந்தது. பின்னர் கோபுரக் கலசத்திற்கு சந்தன பொட்டிட்டு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மூலவர் கணபதி, செல்லாண்டியம்மன், கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை காண 18 பட்டிகளை சார்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!