Skip to content

கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய (TNUSRB)   கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்.   கடந்த ஆண்டு இவர் இந்த பதவியில் இருந்தபோது  சென்னை எழும்பூரில் உள்ள இவரது  தலைமை அலுவலகத்தில்  இவரது அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  ஜூலை 29ல் இந்த சம்பவம் நடந்தது.

இது குறிதூது  எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி,  மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக  முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்தனர்.

ஆனால், இந்த தீ விபத்து தன்னைக் கொலை செய்வதற்காக நடைபெற்ற சதி என டிஜிபி, உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு தலைமைச் செயலாளருக்கு ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக, காவல்துறையில் ஆட்சேர்ப்பின் போது நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், தன் மீது கொலை முயற்சி நடந்ததாக கல்பனா நாயக் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி, சென்னை அலுவலகத்தில் உள்ள தனது அறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தலில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் உள்ள முரண்பாடுகளைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்ததாகவும்  கல்பானா  புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

முக்கியமாக, “2024, ஜூலை 29 அன்று, சென்னை எழும்பூரில் உள்ள TNUSRB தலைமை அலுவககத்தை அடைய சில நிமிடங்களுக்கு முன்புதான், அவரது அறையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று காவல்துறை அதிகாரியிடம் இருந்து  தகவல்  வந்தாகவும். பின்னர் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது, அலுவலகம் தீயால் சேதமடைந்துவிட்டது.

 நான் சற்று முன்னதாக வந்திருந்தால், என் உயிரையே இழந்திருப்பேன் என்பது தெளிவாகத் தெரிந்தது” என்று புகார் மனுவில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மேல் விசாரணை நடத்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
error: Content is protected !!