கோவையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இரு பெண் குழந்தைகளின் தாய். இவர்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் திருமதி உலக அழகி போட்டி நடந்தது. இந்த போட்டியில் கோவையை பூர்வீகமாக கொண்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். இரு பெண்களுக்கு தாயான பிளாரன்ஸ் இந்த போட்டியில் ‘சர்வதேச மக்களின் தேர்வு’ அழகி பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது. மனநல சிகிச்சை நிபுணர், பெண் தொழில்முனைவாளர், எழுத்தாளர், யோகா பயிற்சியாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர் இவர். கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற ‘மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக்’ அழகி போட்டியில் பட்டம் வென்றவர் பிளாரன்ஸ். இவர் பல்வேறு சமூக சேவைப் பணிகளிலும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.