திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழினர் முறை அகற்றுதல் குறித்து வருவாய்த்துறை தொழிலாளர் நலத்துறை காவல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பிர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து, கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுவிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தினமாக பிப்ரவரி 09 ஆம் தேதி கடைபிடித்து வருகிறது. இருநிகழ்வினையொட்டி கொத்தடிமைத் தொழிலாளர் முறை அற்றுதல் தொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில், வருவாய்த்துறை அலுவமர்கள், தொழிலாளர் முறை அலுவலர்கள், தொழிலக பாதுகாப்புத்துறை, காவல் துறையினர், மற்றும் தன்னார்வத் கீதொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இன்று 04:02.2023 ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்புரையாற்றியதாவது….
தமிழக அரசு தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக ஏற்படுத்த வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளது. எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தமது மாவட்டத்தை கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை அதற்றுதல்” குறித்த உறுதிமொழியை அனைத்துத்துறை அதிகாரிகளும் எடுத்துக்கொண்டனர்.
மேலும், திருச்சிராப்பள்ளி தொழிலாளர் துறை மற்றும் IM தொண்டு நிறுவனம் இணைந்து இப்பயிற்சியினை நடத்தினர். இதில் கொத்தடிமைத் தொழிலாளர்களை கண்டரிந்து மீட்டு மறுவாழ்வு அனிக்கவும். கொத்தடிமையாக வைத்து, இருப்போர் மீது சட்ட நடஷக்கை எடுக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், தொழிலாளர் நுறையின் உதவி ஆணையர் (அமலாக்கம்). ஏ.வெங்கடேசன் தொடர்புடையத் துறை அலுவலர்கள், தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.