திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தண்ணீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருச்சி மாவட்டம் மண்ணச்சல்லூர் அருகே வெங்கக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தமது வீட்டிற்கு அருகே புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க முடிவு செய்து அதற்காக பணியாட்களை வரவழைத்து பணியை தொடங்கியுள்ளார். சுமார் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய போது சிலைகள் தென்பட்டது.