திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 28 ந் தேதி தொடங்கி நாளை 3 ந் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 6 ஆம் நாளான இன்று இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர்கள் வைரமணி காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, நீலமேகம், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவாரம், ஐஜி ஜோஸ் நிர்மல் குமார், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி மாவட்ட காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் சரவணன்,
திருச்சி துணை மேயர் திவ்யா மற்றும் திருச்சி கழக மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் வரவேற்பு அளித்தனர்.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். வருகை தந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்றனர்