Skip to content

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

  • by Authour

இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.

“அனைத்து பெரிய பொருளாதார நாடுகளுள் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் கடந்த 10 ஆண்டு வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் திறன் மீது நம்பிக்கை உயர்ந்துள்ளது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய அரசு மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தன் தன்யா கிருஷி என்கிற திட்டம் அறிவிக்கப்படுகிறது. குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த  திட்டத்தின் முக்கிய இலக்கு. அதிக மகசூல் தரும் தானியங்கள் தொடர்பாக புதிய திட்டம். துவரம், உளுத்தம் பருப்பு, சிறுதானிய தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம்.  புதிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.  பருப்பு வகை தானியங்களில் தன்னிறை  அடையும் வகையில் 6 ஆண்டு காலத்திற்கான பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தாமரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் மகானாவுக்கு புதிய வாரியம அமைக்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் உணவு பதப்படுத்ததலுக்கான தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.

உலகளவில் பொம்மை உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற புதிய திட்டம்.

அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும்.

கடன் உதவி திட்டங்கள்…

சிறு தொழில் துறையினருக்கு ரூ. 5லட்சம் நிதி உதவியுடன் கிரெடிட் கார்டு.

பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.2 கோடி அளவுக்கு கடன் உதவி.

பழங்குடியின பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ. 2 கோடி கடன் உதவி  .

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்...

மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75, 000 இடங்கள் சேர்க்கப்படும்.

அடுத்த ஆண்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள்.

பீகார் மாநிலம் பாட்னாவில் ஐஐடிகளில் இந்தாண்டு கூடுதலாக 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை.

அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மைய வசதி அமைக்கப்படும்.

கிக் பணியாளர்களின் நலனுக்காக அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

Swiggy, Zomato ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்கள் 1 கோடி பேர் பயன்பெறுவர்.

2028ம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் இலக்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2028க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் மூலம் குழாய் வழங்கும் ஜல்ஜீவன்  திட்ட இலக்கை நிறைவு செய்ய முடிவு.

120 புதிய வழித்தடங்களில் விமான சேவை…

120 புதிய வழித்தடங்களில் விமான செவை வழங்கும் வகையில் உதான் திட்டம். மலை , வடகிழக்கு பகுதிகளில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கு கூடுதல் கவனம்.

பீகார் மாநிலத்திற்கு என்று பிரத்யேக நீர்ப்பாசன திட்டங்கள்.

பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

50 முக்கிய சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும்…

நாட்டிலுள்ள 50 முக்கிய சுற்றுலா தளங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்பட உள்ளது.

குறிப்பிட்ட சுற்றுலா குழுவினருக்கு விசா விண்ணப்ப கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு.

மருத்துவ சுற்றுலா, Heal in India போன்ற திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு 100% அதிகரிப்பு…

காப்பீட்டுத் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக  அதிகரித்துள்ளது.

வருமான வரித்துறையில் 100 சட்டப்பிரிவுகளை குற்றம் அற்றதாக ஆக்கும் வகையில் ஜன்விஷ்வாஷ் 2.0 மசோதா.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை திட்டம்.

12 அரிய வகை கனிமங்களுக்கு வரிவிலக்கு

எலெக்டரிக் வாகனங்களுக்கான பேட்டரிக்கு இறக்குமதி வரியில் விலக்கு.

36 வகையான உயிர் காக்கும் மருந்துகளுக்கு அடிப்படை இறக்குமதி வரியில்  இருந்து முற்றிலும் விலக்கு.

புற்றுநோய் போன்ற  அரியவகை நோய்களுக்கான 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு.

லித்தியம் பேட்டரி, சிங்க், கோபால்ஸ்  பௌடர் உள்ளிட்ட 12 வகையான அரிய வகை கனிமங்களுக்கு வரி விலக்கு.

புதிய ஏற்றுமதி ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்படும்

அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு 100% அதிகரிப்பு..

அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பு 100 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் திருக்குறளை மேற்கொள் காட்டி உரை..

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி எனும் திருக்குறளை குப்பிட்டுள்ளார்.

ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு..

ஆண்டுக்கு ரூ. 12லட்சம் வரை வருமானம்  பெறுவோருக்கு வருமான வரி இல்லை என  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

error: Content is protected !!