Skip to content

தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில்    திருவாரூர், திருவள்ளூர் கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

ஈரோடு கூடுதல் கலெக்டர்  சதீஷ், தர்மபுரி கலெக்டராக மாற்றப்பட்டார்.  சென்னை  குடிநீர் வடிகால் வாரிய  நிர்வாக இயக்குனர் சரவணன்  திண்டுக்கல் மாவட்ட கலெக்டராகவும்,   சிறப்பு திட்ட அம லாக்க  துணை  செயலாளர்  பிரதாப் திருவள்ளூர் கலெக்டராகவும்,  மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்,  கிருஷ்ணகிரி  மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டனர்.

மாநகராட்சி நிர்வாக இணை  ஆணையர்  சேக் அப்துல் ரஹ்மான்,  விழுப்புரம்  கலெக்டராகவும்,  திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், திருவண்ணாமலை கலெக்டராகவும்,  திருப்பத்தூர் கலெக்டராக  மோகனசந்திரனும்   நியமிக்கப்படுகிறார்கள்.

இந்து அறநிலையத்துறை  கூடுதல் ஆணையர் சுகுமார்,  நெல்லை கலெக்டராகவும்,  தர்மபுரி கலெக்டர் சாந்தி   சேலம்  பட்டுவளர்ச்சித்துறை  இயக்குனராகவும்,  திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி  வணிகவரித்துறை  ஆணையராகவும்,  எல்காட்  நிர்வாக இயக்குனர் கண்ணன்,  கால்நடைத்துறை இயக்குனராகவும்,

சேலம்  டிஆர்டிஏ   நிர்வாகி  லலிதாதித்ய நீலம்,  மாநகராட்சி  கூடுதல் ஆணையகராகவும்,  விழுப்புரம் கலெக்டராக இருந்த  பழனி,  இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

கிருஷ்ணகிரி கலெக்டர்  சரயு  பொதுத்துறை இணை செயலாளராக மாற்றப்பட்டார்.  செங்கல்பட்டு  மாவட்ட  திட்ட அதிகாரி  அனாமிகா கிராம பஞ்சாயத்து வளர்ச்சி கூடுதல் ஆணையராகவும்,  திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ   கருவூலத்துறை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர்  சிகி தாமஸ் பேரிடர் மேலாண்மைத்துறை  ஆணையராகவும்,  மத்திய பணியில் இருந்து  திரும்பி வரும்  ஆர். ஜெயா,  பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராகவும்,  எக்சைஸ்  இணை செயலாளர்  அம்ரித்  கூட்டுறவுத்துறை  முதன்மை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பழனி  சப் கலெக்டர்  கிஷன் குமார்,  சிதம்பரம் சப் கலெக்டராகவும்,  குடிநீர் வடிகால் வாரிய  நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி   வேளாண் உற்பத்தி துறை ஆணையராகவும்,  பொருளாதாரம் மற்றும்  புள்ளியியல் துறை  ஆணையர் கணேஷ்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  ஆணையராகவும்  மாற்றப்பட்டனர்.

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சங்கர்லால்  குமாவத்,  எக்சைஸ் கூடுதல் செயலாளராகவும்,   வணிகவரித்துறை  இணை  ஆணையர்  துர்கா மூா்த்தி,  சேலம் மேக்னசைட் நிர்வாக இயக்குனராகவும்,  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்,  மெட்ரோபாலிடன் போக்குவரத்து கழக  நிர்வாக இயக்குனராக  மாற்றப்பட்டார்.

திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன்,  எல்காட் நிர்வாக இயக்குனராகவும்,  திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தமிழ்நாடு  ரோடு செக்டர் திட்டம் 2ன்  திட்ட இயக்குனராகவும், பொதுத்துறை  துணை செயலாளர்  பத்மஜா,  விழுப்புரம் டிஆர்டிஏ திட்ட அதிகாரியாகவும்,

தர்மபுரி திட்ட அதிகாா  கவுரவ் குமார்,  சென்னை மெட்ரோபாலிடன் குடிநீர்  வடிகால் வாரிய  நிர்வாக இயக்குனராகவும்,   கைத்தறித்துறை   இயக்குனர்  சண்முகசுந்தரம்,   சிவில் சப்ளை கார்ப்பரேசன்   நிர்வாக இயக்குனராகவும்,

சிறப்பு திட்ட   அமலாக்கத்துறை  செயலாளர்  தரேஷ் அகமது,   guiddance of  oppintment   நிர்வாக இயக்குனராக  நியமிக்கப்பட்டனர்.

துணை முதல்வரின்  செயலாளர்  பிரதீப் யாதவிடம்,  கூடுதல் பொறுப்பாக அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை  செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்.

துணை முதல்வரின்  கூடுதல செயலாளர் ஆர்த்தி தமிழ்நாடு  பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிக்கும் துறை யும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது.

error: Content is protected !!