நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்துவதை, முதன்மை நோக்கமாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.
நாடு முழுவதும் அனைத்தையும் தடைகள் இன்றி டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது.
2047ல் வலிமையான, வளர்ந்த பாரதம் என்ற நமது தாரக மந்திரம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அண்மையில், நாட்டின் 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான யுபிஐ செயலிகள், தகவல் பாதுகாப்புக்கான டிஜி லாக்கர், நாட்டின் முன்னேற்றத்திற்கான உந்துகோல்கள்
2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு ரூ.41,000 கோடி நல நிதி வழங்கப்பட்டுள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி பேர் ஆயுஷ்மான் திட்டம் மூலம் பயன்பெற்றுள்ளனர்.
25 கோடி ஏழைகளின் வறுமை மீட்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் மூலம் இந்தியாவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
மேற்கண்ட அம்சங்கள் ஜனாதிபதி உரையில் இடம் பெற்றிருந்தது.