திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் சார்பில் தலைவர் யு.எஸ்..கருப்பையா, செயலாளர் எம்.கே.எம். காதர் மைதீன், பொருளாளர் ஏ.எம்.பி. அப்துல் ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் சார்பில் காவல்துறைக்கு அளித்த மனுவின் அடிப்படையில் வியாபார சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.எங்கள் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளே இரவிலும், பகலிலும் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் தடுத்திட வேண்டும்.மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் மணிமண்டப சாலை காந்தி சிலை அருகில் ஒரு போலீஸ் புறக்காவல் நிலையம், தர்பார்மேடு காந்தி மார்க்கெட் ஐந்தாம் நம்பர் கேட் வெளியே இடதுபுறம் காலியாக உள்ள இடத்தில் ஒரு புறக்காவல் நிலையமும் அமைத்து தினசரி போக்குவரத்தை சரி செய்வதோடு, பொதுமக்கள் பாதுகாப்பாக மார்க்கெட்டிற்கு வந்து செல்ல போலீசார் உதவி செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று புதிதாக வளையல் கார தெரு, நடுக்கல்லுக்கார தெரு,ஏ.பி நகர், விஸ்வாஸ் நகர், மகாலட்சுமி நகர், தனரத்தினகர், பெரியார் நகர், வரகனேரி, ஆனந்தபுரம் மேட்டு தெரு, கல்மந்தை காலனி, நெல்பேட்டை தெரு, மாநகராட்சி வாட்டர் டேங்க், கால்நடை மருத்துவமனை, ஆழ்வார் தோப்பு ஆகிய 14 இடங்களில் பீட் அமைத்ததற்கு போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் முக்கிய கோரிக்கையாக காந்தி மார்க்கெட் கிழக்கு பகுதியில் இருபுறமும் இரண்டு புறக்காவல் நிலையங்கள் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.