சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கை தானா முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட், விசாரணைக்குழுவை அமைத்தது. அதில் சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்த குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கினை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டி.எஸ்.பி. ராகவேந்திரா ரவி விலகி உள்ளார். குழு அதிகாரிகள் தனது பணியை சரிவர செய்யவிடாமல் தடுப்பதாகவும், இதன் காரணமாக விசாரணைக் குழுவில் இருந்து தான் விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டி.எஸ்.பி. ரவியின் இந்த முடிவு காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.