நாகை மாவட்டத்தில் கடந்த 4 , தினங்களாக பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்து வருகிறது. இதனிடையே நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த, தாண்டவமூர்த்தி காடு, காமேஸ்வரம், பூவைத்தேடி, விழுந்தமாவடி, புதுப்பள்ளி வேட்டைக்காரனிருப்பு, பொய்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் மகசூல்
இழப்பும் ஏற்பட்டுள்ளது. நிலக்கடலை சாகுபடிக்கு ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் இந்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.