தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அய்யம் பேட்டை அருகே பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் நடந்த முகாமிற்கு பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். இதில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் கண்ணன், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன், திமுக அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலர் சுரேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் ராமனாதன், மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட
தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிஃபாயி, டாக்டர்கள் ஏஞ்சலா, ரகுநாத் உட்பட கிராம மக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். இதில் கால் நடைகளுக்கு பொது சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை ஊசி, சினை பரிசோதனை செய்யப்பட்டது. தாது உப்பு கலவை வழங்கப் பட்டது. கால்நடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் சிறந்த கிடறி கன்றை வளர்ப்பவர்களுக்கு 3 பரிசுகளும், சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு 3 ஷில்டுகளும் வழங்கப்பட்டன.