Skip to content
Home » அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

  • by Authour

சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றுள்ளது. அப்போது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க, முயற்சித்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.தொடர்ந்து பேருந்து முகப்பு மற்றும் சன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். தொடர்ந்து பேருந்தில் பயணித்த 9 பேரும்

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர் அன்பரசன் உட்பட பயணியான தெற்குப்பொய்கை நல்லூரைச் சேர்ந்த வசந்தி ஆகியோர் கால் மற்றும் தலையில் லேசான காயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்துகிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு பேருந்த மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பேருந்து மீட்கப்பட்டது. இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *