திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம் திருச்சி மண்டலம், மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பட்டிமன்றம் நிர்வாக இயக்குநர், இரா. பொன்முடி தலைமையில நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) பேராசிரியர். தே.சுவாமிராஜ் குளிர்மை அரங்கத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம் திருச்சி மண்டலம், மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பட்டிமன்றம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் இரா. பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
சாலை விபத்துக்களை தவிர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பது காலநிர்வாகமா! கடுமையான சட்டங்களா! கவனச்சிதறல் இன்மையா! என்கின்ற தலைப்பில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பட்டிமன்றம் நிர்வாக இயக்குநர் இரா. பொன்முடி அவர்கள் தலைமை ஏற்றதுடன், நடுவராகவும் இருந்து பட்டிமன்றத்தை நடத்தினார்கள்.
சாலை விபத்துக்களை தவிர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பது கால நிர்வாகமா! என்ற தலைப்பில் பிஷப் ஹீபர் கல்லூரி உதவிப் பேராசிரியர், முனைவர். பெ.ஆனந்த், மாணவன் க.ஆதித்யா (இளங்கலை வணிகவியல்) கடுமையான சட்டங்களா! என்ற தலைப்பில் பிஷப் ஹீபர் கல்லூரி இணைப்பேராசிரியர், முனைவர் அ.கோபிநாத், மாணவி. ஞா.சந்தியா (இளங்கலை வரலாறு), கவனச்சிதறல் இன்மையா ! என்ற தலைப்பில் மாணவி, சு.சுவாதிகா (இளங்கலைக் கணினி அறிவியல்), மாணவன், தி ஹரிஹரசுதன் (இளங்கலை வரலாறு) ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
இறுதியாக பட்டிமன்ற நடுவராக இருந்த நிர்வாக இயக்குநர் இரா. பொன்முடி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். உலகத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தமிழ்மறை திருக்குறள். திருக்குறளில் அனைத்து விதமான சிக்கலுக்கும் தீர்வு உண்டு. அதன் அடிப்படையிலும், வாதத்தின் அடிப்படையிலும், தீர்ப்பு கூற விழைகிறேன். தீர்ப்பு வாதத்தின் அடிப்படையில் எழுதப்படும். காலத்தின் அருமை, மகளிர்க்கு மட்டுமே உண்டு.
கவனச்சிதறல் என்று சொல்லும் போது, தேர்வு அறையில் நுழையும் போது, வினாத்தாள் வாங்கியவுடன் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சில நேரத்தில் குழப்பங்கள் ஏற்படும். கவனத்துடன் வினாத்தாளைப் படித்து உரிய பதில் எழுத வேண்டும். வாகன ஓட்டியாக இருந்தால் சிலவற்றைக் கவனிக்க வேண்டும். வாகனத்தின் டயர்களில் காற்று உள்ளதையும், பிரேக் பிடிப்பதையும், எரிபொருள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் தலைக்குப் போடுவது உயிர் காப்பது உணர்ந்து மனப்பூர்வமாக அணிய வேண்டும். கடுமையான சட்டம் தீர்ப்பு தரலாம். மனமாற்றமே தீர்வைத்தரும். மனித இயல்பு அடுத்தவரை குறை சொல்வது, கல் இடித்தது, முள் குத்தியது என்பது போல கடுமையான சட்டங்கள் இருந்தாலும், எதற்காக சட்டங்களை இயற்றினார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். காலம் கடந்து செல்வது கதைக்கு ஆகாது. கவனச்சிதறல் வருவதற்கும், கடுமையான சட்டங்கள் கடைப்பிடிக்காமல் போவதற்கும், முக்கிய காரணமாக விளங்குவது கால நிர்வாகமின்மேயே! அதனால்தான் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. குறித்த நேரத்தில் புறப்படுமாறு நம்மை தயார்படுத்திக் கொண்டால், கவனச்சிதறல் இருக்காது. விதி மீறல்களும் இருக்காது. அனைவரும் விழிப்போடு இருந்து சாலை விபத்துக்களை தவிர்ப்போம் என நிர்வாக இயக்குநர் பொன்முடி தீர்ப்பளித்துப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பொது மேலாளர், ஆ. முத்துக்கிருஷ்ணன், (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) பிஷப் ஹீபர் விரிவாக்கப்புல முதன்மையர், முனைவர் வே.ஆனந்த் கிதியோன், சாலை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் தியோப்லஸ் ஸடீபன் ஸ்மித், விரிவாக்கப்புல அலுவலர், முனைவர் நெல்சன், துணை மேலாளர்கள், திரு. ஆர். சாமிநாதன், (தொழில்நுட்பம்), பி.ரவி, துணை மேலாளர் (பணியாளர் மற்றும் சட்டம்), மற்றும் பேராசிரியர்கள் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இப்பட்டிமன்றத்தில் பங்கேற்றனர்.