Skip to content

திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் ராஜமாணிக்கம் (30) இவர் மனநல பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்நிலையில் வீட்டில் இருந்தவர் நேற்று அதிகாலை அவரது தாய் முத்துக்கண்ணு ராஜமாணிக்கத்தை வீட்டில் விட்டுவிட்டு காய்கறிகள் வியாபாரத்திற்காக வாங்குவதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் சென்று விட்டு திரும்ப வந்து பார்த்தபோது ராஜமாணிக்கம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்து முத்துக்கண்ணு இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் ராஜமாணிக்கத்தின் உடலை அடக்கம் செய்வதற்கு உரிய ஏற்பாட்டினை உறவினர் மூலம் முத்துக்கண்ணு செய்து வந்தார். இந்நிலையில் இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!