Skip to content

கடன் தொல்லை…. ஒரே சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சேலம் அருகே பரிதாபம்..

சேலம் மாவட்டம் அரிசிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு நபர்களிடமும் அதிகளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன வேதனையில் இருந்த வந்த பால்ராஜ் தனது மனைவி ரேகா மற்றும் மகள் ஜனனியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், வெள்ளிப்பட்டறை உரிமையாளர் பால்ராஜ் (45) அவரது மனைவி ரேகா(35), மகள் ஜனனி (15) ஆகியோருடன் தற்கொலை செய்துகொண்டனர். 3 பேரின் உடலையும் கைப்பற்றி பள்ளப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  கடன் தொல்லையால்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!