Skip to content

பிரக்யாராஜ் மகா கும்பமேளா: அமித்ஷா புனித நீராடினார்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில்  12 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா  கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே ஒன்றரை கோடி பக்தர்கள் புதின நீராடினர்.   கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இன்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்  ஆகியோரும் நீராடினர். அவர்களுடன்  சில  சாமியார்களும் நீராடினர்.  இன்று வரை  10 கோடி  பக்தர்கள் நீராடியதாக கணிக்கப்பட்டுள்ளது.    பிப்ரவரி 26ம் தேதி  வரை இந்த மகா கும்பமேளா நடக்கிறது. மொத்தம் 40 கோடி பேர் நீராடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மகா கும்பமேளா என்பதால், 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 11 கோடிக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 26 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
error: Content is protected !!