Skip to content

பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

பல்கலைக்கழக மாணவிகளுக்கான  அகில இந்திய கபடி போட்டி பஞ்சாபில்  நடந்து வருகிறது. இந்த போட்டியில்  தமிழக வீராங்கனைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது . நடுவர் தவறாக அளித்த தீர்ப்புக்கு தமிழக வீராங்கனை எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது நடுவர் தமிழக வீராங்கனைக்கு எதிராக  கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.  அதைத்தொடர்ந்து   பஞ்சாப் ரசிகர்களும், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் தமிழக  வீராங்கனைகள்  அதிர்ச்சி அடைந்தனர்.  அதற்குள்  ஒரு கும்பல் அந்த மைதானத்தில்  போடப்பட்டிருந்த நாற்காலிகளை எடுத்து  தமிழக வீராங்கனைகள்  மீது வீசி  தாக்குதல் நடத்தினர்.

இது குறித்து தமிழக  அணியின் பயிற்சியாளர்  தமிழ்நாடு அரசுக்கும், சென்னை கலெக்டருக்கம்  உடனடியாக தகவல் தெரிவித்தார்.  பஞ்சாபில் தமிழக வீராங்கனைகளுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும் அவர்  அதில் கூறி இருந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும்  தமிழக விளையாட்டுத்துறை  பஞ்சாப்  உயர்  அதிகாரிகளை தொடர்பு கொண்டு  விசாரித்தது.   இந்த சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட   அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

வீராங்கனைகள் பாதுகாப்புடன் இருப்பதாக தமிழக  விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  தகவல் தெரிவித்துள்ளது.