மறைந்த புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவருமான ஆ. செந்தில் இல்லத்திற்று இன்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி வந்தார். அவர் மேயர் திலகவதி மற்றும் அவரது மகன்களிடம் துக்கம் விசாரித்தார். பின்னர் செந்தில் உருவப்படத்திற்கு ஆர். எஸ். பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மேயர் திலகவதி செந்தில் ,திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன், துணை மேயர் எம்.லியாகத்தலி,ஆ.செ.கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.