Skip to content

நாதகவுக்கு முழுக்கு போட்டு திமுகவில் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்

பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இன்று திமுகவில் இணைந்தனர்.  குறிப்பாக  நாம் தமிழர் கட்சி   முக்கிய நிர்வாகிகள் 51 பேர்   உள்பட  ஏராளமானோர் ,   திமுகவில் இணைந்தனர். இதற்கான  விழா சென்னை  அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.  புதிதாக திமுகவில் இணைந்தவர்களுக்கு  திமுக தலைவரும்,  தமிழக முதல்வருமான  மு.க. ஸ்டாலின்,   திமுக துண்டு அணிவித்து வரவேற்றார்.

திமுகவில் இணைந்த முக்கிய  நிர்வாகிகள் விவரம் வருமாறு:

கோவை வடக்க மாவட்ட செயலாளர் ராமச்சதிரன்,  நெல்லை மத்திய மாவட்ட செயலாளர்  நெல்லைக்கண்ணன்,  தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன்,  தஞ்சை தெற்கு  முன்னாள் மாவட்ட செயலாளர்  தேவராஜ், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்  கலியபெருமாள்,  தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவா,  நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத்,  ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் நாகூர் கனி,  சேலம் மத்திய மாவட்டத்தை சேர்ந்த மண்டல செயலாளர்  சேலம் பாலு,  நெல்லை மத்திய மாவட்ட  இளைஞர் பாசறை  நிர்வாகி  பர்வீன்,  தொகுதி செயலாளர் திண்டுக்கல்  தினகரன்,   தொழிற்சங்க  மாநில ஒருங்கிணைப்பாளர் தசரதன்(காஞ்சிபுரம்),  கடலூர் கிழக்கு மாவட்ட  மாணவரணி செயலாளர் தமிழ்மணி,  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொகுதி செயலாளர்  சக்திவேல்,  மதுரை கிழக்கு மாவட்டம்  தொகுதி செயலாளர் அஜீத்,  ராமநாதபுரம்  தொகுதி செயலாளர்  ரூபன்,  தர்மபுதி  மேற்கு மாவட்ட  மகளிர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வி,  சென்னை கிழக்கு சமூக ஆர்வலர்  ஆர். திவ்யா,  மொரப்பூர் ஒன்றிய யெலாளர்  மகேஸ்வரி,  அரூர் மாணவரணி செயலாளர்  சிவகுமார்,  கிருஷ்ணகிரி  பாதுகாப்பு பாசறை அசோக்குமார்,  கிருஷ்ணகிரி  கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்  கவுதம்,  சேலம் மத்திய மாவட்ட குத்துசண்டை சங்க செயலாளர் பிரேம்குமார்,  கிருஷ்ணகிரி  கிழக்கு ஒன்றிய செயலாளர் சூர்யா,  சேலம் மேற்கு தொகுதி  தலைவர் முருகன்

மயிலாடுதுறை மாவட்ட  மகளிா் அணி  சுபாசினி,  பர்கூர் ஒன்றிய செயலாளர்  குணா,   சென்னை சமு்க ஆர்வலர்  வினோத்குமார்,

நாதகவில்  இருந்து  திமுகவில் இணைந்தவர்களில்  9 பேர் இந்த கட்சி சார்பில்  தேர்தலில் போட்டியிட்டவர்கள்.  மண்டல செயலாளர் ஒருவர்,   8 பேர் மாவட்ட செயலாளர்கள்,  ஒன்றிய செயலாளர்கள் 5 பேர்,  சார்பு அணி நிர்வாகிகள் 9 பேர் தொகுதி செயலாளர்கள் 5 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக திமுகவில் இணைந்த  இவர்களுக்கு  முதல்வர் ஸ்டாலின்  திமுக  துண்டு அணிவித்து வரவேற்றார்.