Skip to content

பாஜக, தவெக, நாதகவுக்கு செம அடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இன்று திமுகவில் இணைந்தனர்.  குறிப்பாக  நாம் தமிழர் கட்சி   முக்கிய நிர்வாகிகள் 30 பேர்   உள்பட 2ஆயிரம் பேர் ,   திமுகவில் இணைந்தனர். இதற்கான  விழா சென்னை  அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.  புதிதாக திமுகவில் இணைந்தவர்களுக்கு  திமுக தலைவரும்,  தமிழக முதல்வருமான  மு.க. ஸ்டாலின்,   திமுக துண்டு அணிவித்து வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில்,   திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,  அமைச்சர்  அன்பில் மகேஸ்,  திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி, பழனியப்பன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திமுகவில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் ராஜீவ் காந்தி இணைந்து மாணவர் அணி  பொறுப்பேற்று பணியாற்றுகிறார்.  ஆயிரக்கணக்கான  தோழர்கள்  காத்திருக்கிறார்கள்  அழைத்து வரட்டுமா என கேட்டார்.  அழைத்து வாருங்கள்,.  காத்திருக்கிறோம் என்று சொன்னேன்.

இது நேற்று பெய்த  மழையில் முளைத்த காளான் அல்ல,  1949ல் அண்ணா  திமுகவை உருவாக்கிய நேரத்திலேயே அண்ணா சொன்னார்,   இந்த கட்சி ஆட்சிக்காக மட்டுமல்ல, மக்களுக்கு பணியாற்ற வேண்டும், ஏழைகளுக்கு தொண்டாற்ற வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று  அண்ணா  சொன்னார்.

அதன் பிறகு  திமுக வளர்ந்து 57ல் முதன் முதலில் தேர்தலை சந்திந்தோம். ஆனால் இன்று  கட்சிக்க தொடங்கிய உடன் ஆட்சிக்கு வருவோம் என்கிறார்கள்.  நான் யார் என்று சொல்லவிலலை. அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை. பெயரை சொல்லி இந்த மேடையின்  மதிப்பை  கெடுக்க விரும்பவில்லை.

ஒரு அரசியல் கட்சியாக  இருந்து மக்களுக்கு பாடுபாடக்க கூடிய கட்சியாக இருந்தால் சொல்லலாம், வேடமிட்டு நாடகமாடுகிறவர்கள்   பெயரை நான்   சொல்ல விரும்பவில்லை.    அவர்கள் பெயரை சொல்லி இந்த மேடையின் கவுரவத்தை குறைக்க விரும்பவில்லை. கட்சி தொடங்கிய உடன்  முதல்வர் ஆவோம் என்கிறார்கள்.

திருச்சி மாநாட்டில்  தேர்தலில் ஈடுபடலாமா  என  வாக்கெடுப்பு நடத்தி, ஈடுபடலாம் என  நிர்வாகிகள்  அதுரவு அளித்தால் 57ல்  தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றோம்.  62ல் 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றோம், 67ல்  ஆட்சி பொறுப்பேற்றோம்.   அண்ணா அவர்கள் கடுமையானநோய்க்கு  ஆளாகி நம்மை விட்டு பிரிந்தார். அதன் பிறகு  கலைஞர் ஆட்சிக்கு வந்தார்.   5 முறை முதல்வராக இருந்தார்.  6வது முறையாக  நான் முதல்வராக வந்தேன்.

திராவிடம்  என்றால் சிலருக்கு பிடிப்பதில்லை.   திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்கு கோபம் வருகிறது.  அதனால் மீண்டும் மீண்டும் திராவிட மாடல் என்பதை சொல்வோம். நீங்கள்  எங்களை தரக்குறைவாக பேச பேசத்தான் உங்களிடத்தில் இருந்து  இங்கு வருகிறார்கள். திராவிடம்  என்பதற்கு எதிராக பேசுகிறார்கள்,  மதத்தை மையமாக வைத்து  பேசுகிறார்கள். கவர்னரை  மாற்றுங்கள் என நாங்கள் சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவே்றி  இருக்கிறோமோ,   இல்லை. அடுத்த முறையும் இதே கவர்னா் வரட்டும் .சட்டமன்றத்தில்   உரை படிக்காமல் வெளியேறட்டும்.   ஆளுநரின் பேச்சு திமுகவை வளர்க்கிறது. எனவே இந்த ஆளுநரை மாற்ற வேண்டாம்.  அவரே  தொடர வேண்டும் என பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.  நீங்கள் யாரை நம்பி சென்றீர்களோ  அவர்களும் பேசட்டும்.

தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே இருக்கட்டும். ஒரு பழமொழி சொல்வார்கள். சூரியனைப்பார்த்து ஏதோ குரைக்கிறது என்பார்கள். நான் அதை சொல்ல விரும்பவில்லை.    நான்  மாவட்டம் தோறும் சொல்கிறேன். மக்களை சந்திக்கிறேன். பெண்கள், ஆண்கள், முதியவர்கள், இளைஞர்கள்  ஆகியோரை சந்திக்கிறேன்.  அதைவைத்து சொல்கிறேன் 7வது முறையும்  திமுக தான் ஆட்சிக்கு வரும்.  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை  செல்யபடுத்தி உள்ளோம். இது போல புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.  நம்முடைய காலை உணவு திட்டத்தை வெளிநாடுகளும்  இன்று செயல்படுத்துகிறது.  திமுக அரசின் திட்டத்தால்  ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறுகிறது.  தமிழ்நாட்டுக்கு உழைக்கும் இயக்கும் திமுக. பவள விழா கண்ட இயக்கம்.  இது நேற்று முளைத்த காளான் அல்ல.

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் தான் இருக்கிறது.  நம்முடைய சாதனையை சொன்னாலே  200 மட்டுமல்ல, 234  தொகுதியிலும் நாம் தான்  வெற்றி பெறுவோம். கலைஞர் அரங்கில் திரண்டு இருக்கிற  உங்களை வருக வருக என வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் தர்மபுதி இளமாறன் நன்றி கூறினார்.