உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதியில் வென்றதன் மூலம் அர்ஜென்டினா, குரோசியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா, குரோசியா அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 14-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 2-வது அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கு குரோசியா, மொராக்கோ அணிகள் அதிர்ச்சி அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.