கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகள் சோர்வின்றி , உடல் நலத்துடன் கல்வி கற்க ஏதுவாக அவர்களுக்கு ரத்த சோகை நோய் உள்ளதா என கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து மாணவ மாணவிகள் கல்வியில் முழு கவனம் செலுத்தி படிப்பதற்கு ஏதுவாக கரூர் மாவட்டத்தில் ரத்த சோகை கட்டுப்பாட்டு இயக்கம் மூலம் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் மின்சார துறை செந்தில் பாலாஜி மூலம் துவங்கப்பட்ட இத்திட்டத்தினை இன்று குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தமிழ்நாடு முதல்வரின் வாக்கியத்திற்கு ஏற்ப பள்ளி யில் பயிலும் மாணவிகள் ரத்த சோகை நோயினால் உடல் சோர்வடைந்து பலவீனமாக கல்வி கற்க முடியாமல் இருப்பதை தவிர்க்கும் பொருட்டும் அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்தினை மேம்படுத்தி ரத்த சோகையினை கட்டுப்படுத்தும் பொருட்டு இத்திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகப்படுத்தி துவக்கியுள்ளதாகவும், கரூர் மாவட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரம் மாணவியர்களிடையே அவர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று 17,000 மாணவியர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதில் பரிசோதனை மேற்கொண்டு ரத்த சோகை உள்ள மாணவியர்களுக்கு மாணவியர்களின் ரத்தசோகை அளவிற்கு ஏற்ப பச்சை மஞ்சள் இளஞ்சிவப்பு நிற அட்டைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 25ம் தேதி கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரத்த சோகை குறைபாடு உடைய மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இன்று குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்தசோகை நோய் அதிகமாக கண்டறியப்பட்ட மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி உள்ளதாகவும், இதன் மூலம் ரத்த சோகையினை ஆரம்பித்திலேயே கண்டறிந்து சரி செய்வது மூலம் அவர்கள் நல்ல திடமான உடல் நலமும் திறனறிவும் பெறுவர். மேலும் நல்ல கண்பார்வையும், படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவர் என்றும் கூறினார்.