திருச்சி ஸ்ரீரங்கம் சங்கரா நகர் பகுதி சேர்ந்த சதீஷ்குமார் (வயது 40) (அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர்) லால்குடி, பூவாளூர் அடுத்த பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55) இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர் இவர்கள் அங்கு பயிலும் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
மாணவி மற்றும் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பெயரில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகாயினி தலைமையில் போலீசார் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் உள்ளிட்ட இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.