தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் அளித்த பேட்டி:
பாரா ஒலிம்பிக் என்பது போர் களத்தில் காயமடையும் வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது. 1956ம் உருவாகப்பட்ட பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது. 1958 ம் ஆண்டு உலகளவில் இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது 75 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள். பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் அனைவரும், சமூகத்தில் பல்வேறு தடை கற்களை தாண்டி போரிட்டு தங்களை நிருபித்துக்கொண்டு இருப்பதால், அவர்களும் போர் வீரர்களுக்கு சமம்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு உள்ள விதிமுறைகளில் சில விதிமுறைகளில் மட்டுமே மாற்றம் இருக்கும்.
உலகளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டகளில் நமது நாட்டை சேர்ந்தவர்களும், தமிழகத்தில் இருந்தும் அதிக பேர் கலந்துக்கொள்ளுவார்கள் என்ற் நம்பிக்கை உள்ளது. மாற்றுதிறனாளிகளை நம்முடன் சேர்த்துக்கொண்டு பயணிக்க வேண்டும். அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இப்போட்டிகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணி வீரர்கள் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கும் வகையில், அந்தந்த கலெக்டர்கள், மாவட்ட முதன்மை கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பல்வேறு வழிகளில் தன்னம்பிக்கை அளித்து வருகின்றனர். மாணவர்கள் பொதுத்தேர்வுகளை தன்னம்பிக்கையுடன், பயமில்லாமல் எழுத வேண்டும். நீங்கள் எடுக்கும் மார்க் அடிப்படையில் உங்கள் தகுதிக்கான நாற்காலி காத்துக்கொண்டு இருக்கிறது. வழக்கமாக அறுவடை நேரங்களில் மழை பெய்வது என்பது அரிது. இருப்பினும், இம்முறை அதிகளவில் மழை பெய்துள்ளது. பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கு எடுப்பு பணிகளை அதிகாரிகள் துவங்கியுள்ளனர். அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.