பேரறிஞர் அண்ணாவின் 54 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ சிலைக்கு அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர், பழனியாண்டி, மாவட்ட பொருளாளர் துரைராஜ்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பி.எம். ஆனந்த், டோல்கேட் சுப்பிரமணி, வழக்கறிஞர் அந்தோணி, மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.