செல்போன்கள் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரில் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புகாரை அடுத்து ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.