Skip to content

திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த சிவ பூஜன் சிங் மகன் மஞ்சித் சிங் ( 43 )இவர் கடந்த 2023 ம் ஆண்டு திருச்சியில் பெல் நிறுவனத்திற்கு டெல்லி பெல் நிறுவனத்தில் இருந்து பணி மாறுதல் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது மஞ்சித் சிங் நிறுவனத்தின் சீனியர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி டிப்திசிங் இவர் பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு 12 ம் வகுப்பு படிக்கும் மகளும், 6ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மஞ்ஜித் சிங் ஆன்லைனில் கிரிப்டோ கரன்சி பிட்காயின் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் பர்சேஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில் பெரிய அளவில் மஞ்சித் சிங் நஷ்டம்  அடைந்து  மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம்  காலை வழக்கம் போல் பணிக்கு சென்றவர் பெல்  4 மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சத்தம் கேட்டு சக ஊழியர்கள் வெளியில் வந்து பார்த்தபொழுது மஞ்சித் சிங் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை  ஆம்புலன்ஸ் மூலம்   மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழியிலேயே மஞ்சித் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெல் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தினர்.இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.