Skip to content

திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு…. தாளக்குடி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருச்சி மாந

திருச்சி மாநகராட்சியை 100 வார்டு கொண்டதாக விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. அதற்காக திருச்சி மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்து வரும் ஊராட்சிகள் பஞ்சாயத்துகள் நகராட்சிகளை கணக்கெடுத்து அவற்றை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கான அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சியுடன் எங்களது ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துகளை இணைக்க வேண்டாம். மாநகராட்சி உடன் இணைத்தால்

வரி உயர்வு விவசாயம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் தொடர்ந்து முழக்கங்களிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் எங்களது ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்க வேண்டாம் எனக் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி உடன் எங்களது ஊராட்சியை இணைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வரி உயர்வை சாமானிய மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது ஆகையால் எங்களது ஊராட்சி பகுதியை மாநகராட்சி உடன் இணைப்பதை உடனடியாக கைவிட வேண்டும் இல்லையென்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் தெரிவித்தனர்.