குடியரசு தினத்தன்று இரவு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும். இதில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்பார்கள். வரும் 26ம் தேதி நடைபெறும் தேநீா் விருந்தில் பங்கேற்க மாட்டோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளனர்.
கவர்னர் ரவியின் நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக இருப்பதால் இந்த புறக்கணிப்பு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.