Skip to content

கும்பகோணம் மருத்துவமனையில் வாந்தி-வயிற்று வலியால் 6 பேர் சிகிச்சை… மேலும் 6 பேர் அனுமதி….

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீலத்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 6 மாணவ மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை கொத்தகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா (வயது 7), புகழினி (5), பைரவி (7), தீபக் (10), சரோஜினி (13), துரைமுருகன்(13) ஆகிய 6 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலி காரணமாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், ஆய்வு முடிவு வந்தபின்னரே முழுவிவரங்கள் தெரியவரும் டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், நீலத்தநல்லூர் தெற்கு தெருவில் மேலாது குறிச்சி பகுதியில் இருந்து கருங்காடு வடிகால் வாய்க்கால் வருகிறது. இந்த வடிகால் வாய்க்கால் சரிவரதூர்வாராததால் கழிவுநீர் தேங்கி சாக்கடையாக காட்சியளிக்கிறது. இதன் அருகே தான் நாங்கள் குடியிருக்கும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் குழாய்கள் உள்ளன. இதனால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் உள்ளது என்றனர்.