ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.இதில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் உள்பட 46 பேர் போட்டியில் உள்ளனர். சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வாக்குப்பதிவு பெறப்படுகிறது. இதற்கான பணி இன்று தொடங்கியது. இதற்காக 40க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டியை எடுத்துச்சென்று வாக்குகளை பெற்று வருகிறார்கள். 27ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். அதன் பிறகு அந்த வாக்குப்பெட்டிகள் சீல்வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடத்தில் வைத்து பூட்டப்படும். பிப்ரவரி 8ம் தேதி இந்த ஓட்டுகளும் சேர்த்து எண்ணப்படும்.