Skip to content

விபத்தில் சிக்கிய பெண்… சிகிச்சைக்கு அனுப்பி வைத்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி புலிப்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற ஒரு பெண் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூரில் இருந்து சொந்த ஊரான பிலிப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார் அப்போது தனது இருசக்கர வாகனத்தில் புடவை சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார் அப்போது அந்த வழியாக சைக்கிளில் சென்ற முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களை கண்டதும் 108 ஆம்புலன்ஸ் அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் . இந்த செயலை கண்ட பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை வெகுவாக பாராட்டினர், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது