திருவெறும்பூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 4 பேரில் பிரபல ரவுடியின் மகன்களில் ஒருவன் உட்பட இரண்டு பேர் போலீசாரரை கண்டு தப்பி ஓடிய போது கால் முறிந்தது.
திருச்சி துவாக்குடி பெரியார் மணியம்மை நகரை சேர்ந்தவர் முகமது ஷெரீப் (35) இவர் திருச்சியை சேர்ந்த செல்வகுமார் என்பவருடன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பொழுது முகமது ஷெரீப் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திரும்ப கேட்டு அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான சாத்தையனின் மகன்கள் கார்த்திக் (45) அவரது அண்ணன் காளிதாஸ் (50) செல்வகுமார் (35), திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த முகமது பாரத் (40) ஆகிய நான்கு பேரும் முகமது ஷெரீப்பை கடந்த 19 ம் தேதி அரிவாளால் வெட்டினர்.
இதில் முகமது ஷெரீப் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த முகமது ஷெரீப் 21ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கை துவாக்குடி போலீசார் கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை தேடி வந்தனர்.
துவாக்குடி ரிங் ரோடு பகுதியில் நின்றிருந்த கார்த்திக் ,செல்வ குமார் ஆகிய இருவரும் போலீசாரை கண்டதும் ஒரு பாலத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றபோது இருவருக்கும் இடது கால் முறிந்தது. அவர்களை போலீசார் பிடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதேபோல் இவ்வழக்கில் தொடர்புடைய காளிதாஸ் மற்றும் முகமது பாரூக்கையும் கைது செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.