Skip to content

டெல்டா மாவட்டத்தில் நெல் ஈரபதத்தினை 4 பேர் கொண்ட குழு ஆய்வு…

டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக அறுவடை பணி முழு வீட்டில் நடைபெற்று வரும் நிலையில் பருவம் தவறிய மழை மற்றும் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும் விற்பனை செய்ய முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து அனைத்து நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகப்படுத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதனை அடுத்து மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவை உதவி இயக்குனர்கள் நவீன் , ப்ரீத்தி தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல் , அபிஷேக் பாண்டே நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர் டெல்டா மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் மற்றும் சீதோசன நிலை குறித்து ஆய்வு மத்திய அரசுக்கு அறிக்கையாக தரவுள்ளனர். இதனையடுத்து நெல்லின் கொள்முதல் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும்.

முதல் கட்டமாக இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பகுதிக்கு உட்பட்ட கற்கரை, புதூர், புழவன் காடு உள்ளிட்ட பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்ய உள்ளனர். இதன் அடிப்படையில் விவசாயிகளின் நெல்மணிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வளவு தேங்கியு உள்ளது. அதன் ஈரப்பதம் எவ்வளவு சீதோசன நிலை உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்ய உள்ளனர்.