Skip to content

கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 11 பேர் பலி

 

கர்நாடக மாநிலம்  ஹாவேரி மாவட்டத்தின் சவனூர் என்ற பகுதியில் இருந்து கும்தா சந்தைக்கு காய்கறிகளை விற்கச்  ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.  யெல்லாபூர் தாலுகாவில் உள்ள குல்லாபூர் கிராமத்திற்கு அருகில்  சென்றபோது உத்தர கன்னடா மாவட்டத்தில் 50 மீட்டர் ஆழமான பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.  இந்த விபத்தில் லாரியில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பள்ளம் காரணமாகவோ அல்லது ஓட்டுநர் சமநிலையை இழந்ததன் காரணமாகவோ லாரி கவிழ்ந்திருக்கலாம். விபத்துக்கான காரணத்தை நாங்கள் கண்டறிந்து வருகிறோம்.” என்று காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.