கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிக்கொண்டு அதிகாலை நேரத்தில் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அந்த லாரியில் மொத்தம் 25 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. குல்லாபுரா என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் 09 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…
- by Authour