108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக சொர்க்கம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதெசி விழா தொடங்குகிறது. முக்கிய வைபவமான பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2-ந்தேதி நடக்கிறது. சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்களுக்கு இரு மார்க்கத்திலும் வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.