கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு பகுதியில் உள்ள பட்டியலின மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடந்து வருகிறது. இதில்,
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மற்றும் ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்று மக்களிடம் மனுக்கள் பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆண்டான் கோவில் பெரியார் நகர், மணவாடி மற்றும் ஜெகதாபி ஆகிய நான்கு பகுதியில் உள்ள பட்டியலின மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற உள்ளனர்.