Skip to content

திருமானூரில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம் திருமானூர் எஸ் ஆர் நகரில் உள்ள பிரில்லியன்ட் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவுருவ சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகள் பள்ளி குழந்தைகளின் சிலம்பாட்டம் திருக்குறள் நாட்டியம் பல்வேறு இசைக் கருவிகள் சங்கமத்துடன் கூடிய சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது மேலும் திருக்குறளை உரைப் பொருளாக 133

குழந்தைகள் வழங்கினர். அக்குழந்தைகளுக்கு திருக்குறள் சுடரொளி விருது சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் முனைவர் மூ கலைவேந்தனின் திருவள்ளுவர் அறம் கவின்மொழிகள் 100 என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்முனைவர் அரங்க.பாரி, மரு.சுநரேந்திரன், கவிஞர் சண்.அருள்பிகாசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.