Skip to content

திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்   சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக  இன்று  காலை  முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வந்தார்.  விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதில் அமைச்சர் கே. என் நேரு, மேயர் அன்பழகன்,   திருச்சி  சிவா எம்.பி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,  பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.  அதைத்தொடர்ந்து  முதல்வர் ஸ்டாலின்  கார் மூலம் காரைக்குடி புறப்பட்டு சென்றார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகத்தை   முதல்வர்  திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, பட்டமளிப்பு விழா அரங்கில் உரையாற்றுகிறார்.