Skip to content

உபியில் 4 கொள்ளையா்கள் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் இன்று அதிகாலை சிறப்பு போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த துப்பாக்கி சண்டையில், முஸ்தபா கக்கா கும்பலை சேர்ந்த அர்ஷத், மஞ்ஜீத், சதீஷ் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் என மொத்தம் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தின்போது  போலீஸ் இன்ஸ்பெக்டர்  சுனில் என்பவரும் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுட்டுக்கொல்லப்பட்ட அர்ஷத்தை ஒரு கொள்ளை வழக்கில் போலீசார் தேடி வந்தனர். அவரைப்பற்றி தகவல்  கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்திருந்த நிலையில்  போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர்.