Skip to content
Home » திருச்சியில் பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்..

திருச்சியில் பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்..

திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்டிரா தெருவில் நேற்று இரவு தள்ளு வண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் கத்தியை காட்டிமிரட்டி இரண்டு வாலிபர்கள் பணம் பறிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அந்த இரண்டு வாலிபர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு பொதுமக்கள் இரண்டு வாலிபர்களையும் பிடித்து கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
இதை அடுத்து பிடிபட்ட இரண்டு வாலிபர்களிடம் கோட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.