கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரில் இன்று அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மும்மூர்த்தியின் ஸ்தலமான திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் இருந்து தீர்த்தம் , முளைப் பாரி எடுத்துவரப்பட்டு நேற்று பொள்ளாச்சி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சிவாச்சார்யார்கள் தலைமையில் கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சி ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு யாஸ்திர ஸ்தாபன அஸ்தபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதனை தொடர்ந்து இன்று காலை ஸ்ரீ ராஜகணபதி விமான கோபுர கும்பாபிஷேகம் , மூலாலய மஹா
கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு மகா தீபாரணை நடைபெற்றது இதில் பொள்ளாச்சி கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் சியாமளா நவநீதகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.