நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் ஒரிஜினல் அல்ல, அது ஜோடிக்கப்பட்ட புகைப்படம் எனவும், அந்த படத்தை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன் என சினிமா இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி அளித்து உள்ளார்.
அவரது பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் அஜீத்குமார் என்பவர் தமிழக டிஜிபி, மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் இந்த போலி புகைப்படத்தை காட்டி சீமான் வெளிநாட்டு தமிழர்களிடமும், தமிழ்நாட்டிலும் பணம் வசூலித்து உள்ளார். மோசடி படத்தை காட்டி பணம் வசூலித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
இந்த புகார் காரணமாக நாதக கட்சியில் பரபரப்பு ஏ்பட்டுள்ளது.